இன்று{05/07/2011} காலை 9.30 மணியளவில் எமது photo journalisam பயிற்சியினை மேற்கொள்வதற்காக ஊடகப்பயிற்சி நிலையத்தில் இருந்து யாழ். நகரப்பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு எமது மாணவர்கள் குழுக்களாக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.அதில் எமது குழுவினர் யாழ்ப்பாணம் முனீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறும் மகோற்சவத்தினை பதிவு செய்வதற்காக தயாரானோம். ஆனால் எமது ஆர்வத்திற்கு எல்லை ஏது? செல்லும் வழிகளில் நாம் கண்ட காட்சிகள் அனைத்தையும் எமது கமராவில் பதிவு செய்தவண்ணமே எமது பயணப்பாதை தொடர்ந்தது. எமது பதிவுகளில் நடைபாதை வியாபார கடைத்தெரு அதன் அருகே உள்ள புல்லுக் குளம் அங்கு மலந்திருக்கும் தாமரை மலர்கள் மற்றும் குளத்தின் அருகே காணப்படும் காண்கள் குப்பைகள் என எதையும் எமது பதிவுகளில் விட்டு வைக்காமல் கமராவில் பதிந்த வண்ணமே சென்றோம்.
 |
| யாழ் மணிக்கூட்டு கோபுரம் |
 |
புல்லுக்குளம் அங்கு மலந்திருக்கும் தாமரை மலர்கள் |
அடுத்து நாம் பதிவு செய்த காட்சி உண்மையில் என் மனதில் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தியது. அப்படி என்ன விடயம் என்று யோசிக்கிறீர்களா? சிதைந்த நிலையில் காட்சியளிக்கும் தந்தை செல்வாவின் உருவச்சிலைதான் அந்த பதிவு.
 |
| தந்தை செல்வாவின் உருவச்சிலையின் தற்போதைய நிலை!!! |
இதைத் தொடர்ந்தே யாழ். நகரில் செல்லும் வாகனங்களையும் யாழ் மண்ணின் பண்பாட்டை புலப்படுத்தும் பனைமரக் காட்சிகளையும் பதிவு செய்த நாம் முனீஸ்வரர் கோயிலை சென்றடைந்தோம்.
![]() |
| ரம்மியமான திருவிழாவின் பதிவு |
![]() |
| அன்னதானத்திற்கான” தயார்படுத்தல் நிகழ்வு |
அங்கு ரம்மியமான திருவிழாவின் சில பதிவுகளையும் அங்கு நடைபெற போகும் “அன்னதானத்திற்கான” தயார்படுத்தல் நிகழ்வுகளையும் எமது கமராவில் பதிவு செய்தோம்.
 |
| யாழ். நகரப்பகுதி |
 |
| யாழ்பாணத்தின் ஓர் அடையாளமான பனை மரம் |
இதற்க்கிடையில் ஏற்பட்ட என்னால் மறக்க முடியாத சம்பவமும் உண்டு. “ போட்டோ எடுக்கும் ஆர்வத்தில் தனது செருப்பை அறுத்து விட்டு நின்ற நண்பியின் நிலையையும் அந்த அறுந்த செருப்பையும் கமராவில் பதிவு செய்ய துடித்த எம் ஆர்வத்தையும் என்னால் மறக்க முடியவில்லையே..”
 |
| ஆதரவை இழந்த நிலையில் நண்பியின் செருப்பு!!! |
இப்படி எத்தனை சம்பவங்கள் என் மனதில்!!!!
இவ்வாறே தொடர்ந்தது எமது பதிவுகள் பின் கமராவில் charge இல்லாமல் கமரா off ஆக எமது பதிவு சோகத்துடன் நின்று போனது.